AL-QUREISHI HAJJ & UMRAH SERVICE Banner Image

AL-QUREISHI HAJJ & UMRAH SERVICE

Tours and Travels Tour Operators

AL-QUREISHI HAJJ & UMRAH SERVICE
Visiting card
Business Enquiry

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்குறைஷி ஹஜ் & உம்ரா சர்வீஸ்

ஹஜ்ஹையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக நிறைவேற்றுங்கள் (அல்குர் ஆன் 2:16)

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ளம் கொண்ட அல்லாஹ்வின் நல்லடியார்களே இத்தகவல் தங்களை பூரண ஈமானுடனும் உடல் ஆரோக்கியத்துடன் சந்திக்கட்டும் என்று ஏக இறைவனாகிய அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாக.

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருளாளும், அன்பாலும் உங்கள் அனைவரின் துவா பரக்கத்தாலும் நமது " அல் குறைஷி " ஹஜ் உம்ரா, 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.

எங்கள் நிறுவனத்தின் நிறைகளை நம் இஸ்லாமிய மக்களிடம் கொண்டு சென்ற, செல்கின்ற நல்ல உள்ளங்களுக்கு என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். (ஜஸாகல்லாஹ் கைரன்) நம் இஸ்லாமிய மக்களின் விருப்பத்திற்கிணங்க வருடா வருடம் "மிக குறைந்த சலுகை கட்டணத்தில் உம்ரா பயண ஏற்பாட்டை கடந்த 4 ஆண்டுகளாக அல்லாஹ்வின் உதவியுடன் செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு 5-ஆம் ஆண்டின் துவக்கத்தை இன்ஷா அல்லாஹ் (2017-2018) நவம்பர் / டிசம்பர் - ஜனவரி ஆகிய மூன்று மாதங்களின் நம் இஸ்லாமிய மக்களுக்கு உம்ரா பயணத்திற்கு 2017-2018 குறைந்தது 3,000 ஹாஜிகளை உம்ராவிற்கு அழைத்துச் செல்வதற்கான திட்டத்தின் முயற்சியில் இருக்கிறோம்.

இதற்கு அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்ய உங்களின் துவாவையும், ஆதரவையும், கேட்டுக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் அதற்குண்டான " மிகக்குறைந்த கட்டணத்துடன் கூடிய அறிவிப்பு விளம்பரத்தை உங்கள் மூலம் நம் இஸ்லாமிய மக்களுக்கு இத்துடன் இணைத்துள்ளோம்.

தற்பொழுது 2017 - 2018 கோடை கால உம்ரா, ஜியாரத் உம்ரா, மற்றும் ரமலான் உம்ராவின் " மிகக் குறைந்த கட்டண " அறிவிப்பு விளம்பரத்தை இதனுடன் இணைத்துள்ளோம்.

அல்லாஹ்வின் முதல் இல்ல உம்ரா பயணத்திற்கு உங்களுக்கு மீண்டும் செல்லும் நாட்டம் இருந்தால் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். உங்களை சிறப்பாக உபசரிக்க காத்திருக்கிறோம். தங்களுடைய உறவினர், மற்றும் தெரிந்தவர்கள் உம்ரா செல்லும் நாட்டம் கொண்டிருந்தால் அவர்களுக்கு எங்களை பரிந்துரைக்கும்படி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் உங்களின் பரிந்துரையை சிறப்பாக்குவோம். அதே போல் இந்த வருடம் 2017 ஹஜ் ஏற்பாடு செய்தோம் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் சிறப்பாக அவர்களை உபசரித்தோம்.

இன்ஷா அல்லாஹ் (2018) சிறப்பாக ஏற்பாடும், உறுதியான பயண திட்டத்துடன் அனைத்து வசதிகளும் பொருந்திய, ஹாஜிகளின் இறைவணக்க ஹஜ் கடமையை இனிதே நிறைவேற முழு ஒத்துழைப்பையும், எங்கள் சவுதி (அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.) மக்கா மற்றும் மதினாவின் எங்கள் பொறுப்பாளர்கள் தாங்களை சிறந்த மார்க்க அறிஞர்களைக் கொண்டு வழி நடத்த தயாராக உள்ளனர். குறிப்பு : (தமிழக உணவு வழங்கும் வசதி அரசின் உரிமம் பெற்ற நிறுவனம்) மக்கா,மதினாவில் நம் "தமிழக உணவு" சிறப்பாக வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் அல்லாஹ் எங்களுக்கு வழங்கிய இந்த நிறுவனத்தை நம்பி வந்த பல ஆயிரக்கணக்கான உம்ரா ஹாஜிகளில், நிச்சயம் சிலரின் மன வருத்தத்திற்கும், கோபத்திற்கும், மன வேதனைக்கும், வாக்குறுதி மீறலுக்கும் ஆளாகி இருப்போம், நிச்சயமாக அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம்.

நாங்கள் எங்கள் சக்திக்கு உட்பட்டு அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கு எதை வாக்குறுதியாக கொடுத்தோமோ அதை இயன்றவரை நிறைவேற்றினோம். மனிதன் என்ற அடிப்படையில் எங்களின் சக்திக்கு மீறிய விஷயத்தில் (சவுதி அரசின் சட்ட திட்டத்தால்) நாங்கள் உங்களின் வெறுப்பிற்குள்ளானவராக இருந்தால் எங்களை அல்லாஹ்விற்கான மன்னித்து விடுங்கள். இன்ஷா அல்லாஹ் எங்கள் குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிச்சயம் சரி செய்ய முயற்சிப்போம். இயன்றதை சரி செய்து கொள்கிறோம். எங்கள் நிறைகளை மக்களிடம் சொல்லுங்கள். மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.

குறிப்பு : இந்த ஆண்டு ரமலான் மாத உம்ராவையும் மற்றும் ஹஜ்ஜையும் தவணை முறையில் ஏற்பாடு செய்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஹாஜிகள் ஒரு போதும் ஏழையாக மாட்டார்கள் : நபி (ஸல்)

ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்கு கூலி சுவனத்தை தவிர வேறில்லை : நபி (ஸல்)

------------------------ இவண் -------------------------

அல்குறைஷி ஹஜ் & உம்ரா சர்வீஸ்

·         செல் : 7418850699